சென்னை :மீண்டும் தேவையில்லாமல் மத்திய அரசு இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது; நேருவின் வாக்குறுதியே நீர் மேல் குமிழியாவதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி., ஊழியர்கள் எல்லாம், வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென, மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு, மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு ...