இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க வேண்டுமென்ற கோரிக் கையை முன்நிறுத்தி, தி.மு.க., நடத்தவுள்ள, டெசோ மாநாடுக்கு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கு மத்திய உள்துறைஅமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தடைகளை மீறி, டெசோ மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மீண்டும் டெசோ:இலங்கைத் தமிழர் பிரச்னையில் சமீபகாலமாக தி.மு.க.,தலைவர் கருணாநிதி, அதிக அக்கறைகாட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்தில், தனி ஈழம் என்பது எனது நிறைவேறாத கனவாக உள்ளது. நான் வாழும் காலத்தில் ...