Filmy Filmy Bollywood Finance Sports Technology Andhra Tamilnadu Karnataka Kerala  
search
Home

ThatsTamil Tamil News

ThatsTamil Tamil News - தமிழ் செய்திகள்  

தமிழ் செய்திகள்

ThatsTamil News Thats Tamil News Thatstamil news headlines Thatstamil top stories Thatstamil news in Tamil
Share    
  விஜய்க்கு பட்டம் தரும் மதுரை விழா.. தடை விதிக்கிறது தமிழக அரசு!
  விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தருவதற்காக மதுரையில் ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு தமிழக அரசு இன்னும் அனுமதி தரவில்லை. மேலும் இந்த விழாவை தவிர்க்குமாறு சற்று கண்டிப்போடு கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விஷயம் தெரிந்து ஆடிப் போயுள்ளார்களாம் விஜய்யும் அவருக்கு விழா எடுக்கும் குழுவினரும்.
  கார்கில் வெற்றி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
  டெல்லி: கார்கில் போர் வெற்றியின் 15வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது: கார்கில் வெற்றி தினமான இன்று நமது வீரர்களின் வீழ்த்த முடியாத தைரியம் மற்றும் தியாகத்தை நாம் நினைவு கொள்வோம். கார்கில் போர் தியாகிகளுக்கு
  முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி!
  தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி படம், முதல் வாரத்தில் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது. தனுஷ், அமலா பால் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. படத்துக்கு ஆதரவாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்தன.
  சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேச எதிர்கட்சியினருக்கு அனுமதியில்லை: மு.க.ஸ்டாலின்
  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சட்டப் பேரவையில் விமர்சிக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லும்போது பேச அனுமதிப்பது இல்லை. அவையை விட்டே வெளியேற்றுகிறார்கள் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள லட்சுமி மஹாலில் இன்று
  ஹஜ் புனிதப் பயணம்: இட ஒதுக்கீட்டை அதிகரிக்க பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு 2014ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டி 13,159 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால்,
  விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்!
  சென்னை: தமிழினப் படுகொலையாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரிப்பில் விஜய் நடிக்கும் கத்தி படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்தனர் மாணவர்கள் அமைப்பினர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா
  காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 828 பேர் பலி- 5,200 பேர் படுகாயம்; 1,70,000 பேர் அகதிகள்!!
  காஸா: பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மொத்தம் 828 பேர் பலியாகி உள்ளனர். 5,200 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஐ.நா. புள்ளி விவரங்களின்படி சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பாலஸ்தீனர்கள் அகதிகளாகி உள்ளனர். காஸா மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை கடந்த 18 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வருகிறது. தற்காலிகமாக அங்கு 12 மணி
  "கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான நீதியை மோடி அரசு பெற்றுத் தரும்"..ஒரு மாவீரரின் தந்தை
  -ரிச்சா பாஜ்பாய் கார்கில்: பாகிஸ்தான் ஆக்கிரமித்த கார்கிலை மீட்பதற்காக போரிட்டு வீரமரணடைந்த இந்திய வீரர்களுக்கான நீதியை தற்போதைய மோடி அரசாவது பெற்றுத் தரும் என நம்புவதாக மாவீரர் கேப்டன் விஜயந்த் தாப்பரின் தந்தை கர்னல் தாப்பர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கார்கில் போரின் வெற்றித் திருநாளான ஜூலை 26-ந் தேதியன்று ஆண்டு தோறும் தனது மகன்
  தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்: 39 லட்சம் மக்கள் பாதிப்பு
  ஜூபோ: தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுமார் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாகத் தெரிவித்துள்ள ஐநா அதிகாரிகள், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவானது தெற்கு சூடான்.
  இடம் பொருள் ஏவலில் வைரமுத்துவின் பாடலைப் பாடுகிறேனா?- இளையராஜா கடும் மறுப்பு!
  சென்னை: இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை தான் பாடப் போவதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. சீனு ராமசாமி இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் படம் இடம் பொருள் ஏவல். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை
  ஆங்கிலேயரின் அடிமை விலங்கை உடைத்தெறிந்த குற்றாலம்!
  செங்கோட்டை: பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் 30
  கொசுக் கடி தாங்கலியா.. கையில் செல்போனை வச்சிகிட்டு இனிமே அப்படி சொல்லாதீங்க
  வாஷிங்டன்: ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. உலகம் மொத்தமும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. {photo-feature}



Tags : thatstamil,Oneindia tamil, one india tamil,thatstamil site,thatstamil portal,thatstamil news,thatstamil.com,oneindia tamil nadu pradesh,thatstamil tamil nadu news, thats tamil,thats tamil news live,thats tamil oneline news,thats tamil portal,thats tamil headlines,thats tamil top news,thats tamil website, thatstamil websiite,tamil nadu pradesh news, thatstamil tamil nadu news, thatstamil news,thatstamil live,thatstamil online,tamil people,thatstamil live news

Add ThatsTamil Tamil News to your blog or website




About Us - Disclaimer - Privacy Policy - Contact Us - © Copyrights & Disclaimer. All Rights Reserved.
facebook   twitter